நீங்கள் 18 வயது முதல் 30 வயது கொண்ட இளையவரா? சமூக மாற்றத்துக்கான திட்டங்கள் மனதில் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றனவா? உங்களுடைய சிந்தனைகளுக்கு வடிவம் கொடுக்க அரிய வாய்ப்பு வந்திருக்கிறது. சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகமும் நாளந்தாவே அறக்கட்டளையும் இணைந்து இந்த வாய்ப்பை வழங்குகின்றன. இன்றைக்கே இந்தப் படிவத்தில் விண்ணப்பம் செய்யுங்கள்; நவம்பர் 20க்குள் விண்ணப்பித்து விடுங்கள். விண்ணப்பிப்பவர்களிலிருந்து 20 திட்டங்களை நடுவர்கள் தேர்வு செய்வார்கள். இந்த 20 திட்டங்களை முன்வைத்தவர்களும் சென்னையில் டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் அண்ணா சாலையில் எண். 240, பதாரி சாலையிலிருக்கும் மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷனில் நடக்கும் இளையோர் மாநாட்டுக்கு வரவழைக்கப்படுவார்கள்.

இந்த 20 திட்டங்களில் ஐந்து திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு திட்டத்துக்கும் 50,000 ரூபாய் நிதியளிக்கப்படும். டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடக்கும் இளையோர் மாநாட்டில் திரைப்பட இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன் உள்ளிட்ட பல்வேறு தேசிய, சர்வதேச இளம் ஆளுமைகள் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சி காலை 9 மணி முதல் மாலை 7.15 வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியின் முழு விவரங்களை இங்கே பாருங்கள்.

கலைஞருக்கு அஞ்சலி