சமூக ஊடகங்களில் கணக்கை ஆரம்பிக்க வருகிறது கடுமையான சட்டம்

0
567

பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டிவிட்டர், மற்றும் டிக்டாக் போன்ற சமூக ஊடகங்களில் கணக்குகளை தொடங்குவதற்கான விதிகளை மத்திய அரசு கடுமையாக்கப் போகிறது. இதன் மூலமாக உங்கள் ஐடி (ID verification) சரிபார்ப்பு இல்லாமல் இப்போது எந்த கணக்கையும் தொடங்க முடியாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான சட்டத்தை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

போலிச் செய்திகள், வதந்திகள், வகுப்புவாத செய்திகள் மற்றும் பெண்கள் மீதான அநாகரீகமான கருத்துக்கள் ஆகியவை சமூக ஊடகங்களில் அதிகரித்துள்ளன என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான சமூக விரோத செய்திகள் போலி கணக்குகள் மூலம் சமூக ஊடகங்களில் தவறாக பரப்பப்படுகின்றன. தற்போது இதுபோன்ற சமூக விரோதிகளைக் கண்டறிவதற்கு இந்த புதிய சட்டத்தின் வரைவு மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு விரைவில் அதை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும்.

எந்தவொரு சமூக ஊடகத்திலும் ஒரு கணக்கைத் திறப்பதற்கு முன்பு பயனர்கள் தங்களைப் பற்றிய தகவல்களை வழங்க வேண்டும் என்று சட்ட வரைவை தயாரித்து வரும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதில், பயனர் தனது மின்னஞ்சல் ஐடிக்கு கூடுதலாக தொலைபேசி எண்ணை சரிபார்க்க வேண்டிய கட்டாயம்ஏற்படுத்தப்படலாம். மேலும், பயனர்களின் இருப்பிடத்தைச் சரிபார்க்க இணைய நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதன. இது போலி கணக்குகளை உருவாக்கத்தை தடுக்கும். மேலும், வதந்தி பரப்பும்சமூக விரோதிகளை இனம் கண்டுகொள்ள இது வழிவகை செய்யும் எனக் கூறினார்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here