சமூகவலைத்தள கணக்கில் ஆதாரை இணைக்கும் வழக்கு ; ஃபேஸ்புக்கின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

The top court issued notice to the Centre, Google, Twitter, YouTube and others and sought their response by September 13

0
183


சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்கக் கோரி பல உயர் நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி ஃபேஸ்புக் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கை இன்று (செவ்வாய்க்கிழமை)  விசாரித்த உச்ச நீதிமன்றம், தனிப்பட்ட ஒரு குற்றத்துக்காக சமூக வலைதளத்தை குற்றஞ்சாட்ட முடியுமா? என்று கேள்வி எழுப்பியதோடு, இந்த மனு தொடர்பாக பதிலளிக்குமாறு டிவிட்டர், கூகுள், யூடியூப், மத்திய அரசுக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

ஃபேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் மூலம் பல்வேறு குற்றங்கள் நடப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், உச்ச நீதிமன்றம்  இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுள்ளது.

ஃபேஸ்புக் தொடர்ந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருக்கும் உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை செப்டம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்கள் உண்மைத்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்யும் வகையில், பயனாளிகளின் விவரங்களுடன் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என்று பல்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தது.

பொய் செய்திகள், ஆபாச படங்கள் பகிரப்படுவதை தடுக்க ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் கணக்குகளுடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

இதேபோன்ற வழக்குகள் மும்பை மற்றும் போபால் உயர்நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்று ஃபேஸ்புக் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here