ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்டவற்றை தேச விரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரித்துள்ளார்.

நாடுமுழுதும் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூகவளைதளங்கள் மூலம் பரவலாக வதந்திகள் பரவிவருகிறது. இதன் விளைவாக தமிழகம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் குழந்தை கடத்தல் பற்றி பரவிய வதந்தி காரணமாக பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதில் அப்பாவிகள் சிலர் உயிரிழந்தனர்.

அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு எதிராகவும் இவ்வாறான வதந்திகள் பரப்பப்பட்டு அரசுக்கு எதிரான போராட்டங்களும் நடைபெற வழிவகுக்கிறது.

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து மாநிலங்களவையில் பேசிய மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்ப மந்திரி ரவிசங்கர் பிரசாத், வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் உரையாற்றிய அவர் குறிபிட்டுள்ளதாவது :-

வதந்திகள் பரவுவதை தடுக்க வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. பேஸ்புக் , வாட்ஸ் ஆப் ஆகிய நிறுவனங்கள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக எங்களிடம் உறுதி அளித்துள்ளது.

இதனை அடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கையால் சமீபத்தில் 95 வீடியோக்கள் யுடியூப்பிலும், 457 தவறான தகவல்கள் பேஸ்புக்கிலும் நீக்கப்பட்டுள்ளது. மற்றும் ஒரே நேரத்தில் பார்வேர்டு செய்திகளை 5 பேருக்கு மட்டுமே அனுப்ப வாட்ஸ்அப் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும், அனுப்பப்படும் செய்தி பார்வேர்டு செய்தி தானா? என்பதை அறிந்துகொள்ளும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

யாரேனும், வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூகவளைதளங்களை தேசவிரோத செயல்களுக்கு பயன்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார். அதேசமயம் கருத்து சுதந்திரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here