சமாஜ்வாடி கட்சியைத் தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதிநிதிகளுக்கு தடை விதித்த காங்கிரஸ்

0
287


காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் ஒரு மாதத்திற்கு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க வேண்டாம் என்று அக்கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டுள்ளது. 

இதனால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த இழப்பும் ஏற்பட போவதில்லை. முக்கால்வாசி தொலைக்காட்சி நிறுவனங்கள் பாஜகவுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன. ஏறக்குறைய எல்லா டிவி நிறுவனங்களின் ஆசிரியர்களும் பாஜகவுக்கு ஆதரவாகவும், காங்கிரஸுக்கு எதிராகவுமே செய்திகளை ஒளிபரப்புகின்றனர். 

மக்களவைத் தேர்தலில் தோல்வியை எதிர்கொண்ட சமாஜ்வாடி கட்சி , டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அதன் பிரதிநிதிகளைக் கேட்டுக் கொண்டது. அதே முறையில் தற்போது காங்கிரஸ் கட்சியும் அதன் பிரதிநிதிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. 

 காங்கிரஸின் இந்த முடிவு 17-வது மக்களவை தேர்தலில் பெற்ற தோல்விக்கு பிறகு அறிவிக்கப்பட்டிருக்கிறது .  காங்கிரஸ் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத சூழ்நிலையில், தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதற்கு காங்கிரஸ் செயற்குழு நிராகரித்தது. 

இந்நிலையில், தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில், அடுத்த ஒரு மாதத்திற்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் பங்கேற்க வேண்டாம் என்று அக்கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக அக்கட்சி செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தனது டிவிட்டர் பக்கத்தில், ஒரு மாதத்திற்கு தொலைக்காட்சி விவாதங்களுக்கு செய்தி தொடர்பாளர்களை அனுப்புவதில்லை என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. எனவே, தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களது நிகழ்ச்சிகளுக்கு காங்கிரஸ் பிரதிநிதிகளை அழைக்க வேண்டாம் என பதிவிட்டுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here