சமந்தாவை இந்த வருடம் கடுமையாக ஆசிர்வதித்திருக்கிறது. ரங்கஸ்தலம், மகாநடி, மகாநடியின் தமிழ் பதிப்பான நடிகையர் திலகம், இரும்புத்திரை, இரும்புத்திரையின் தெலுங்கு டப்பிங் அபிமன்யுடு, சீமராஜா, யு டர்ன் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகள் என சமந்தா நடிப்பில் இந்த வருடம் வெளியான அனைத்துப் படங்களும் ஹிட். அதிலும் சீமராஜா, யு டர்ன் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகள் செப்டம்பர் 13 ஒரே நாளில் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன.

சமந்தாவின் கணவரும் நடிகருமான நாக சைதன்யா நடிப்பில் அதே செப்டம்பர் 13 தெலுங்கில் சைலஜா ரெட்டி அல்லுடு படம் வெளியானது. நாக சைதன்யாவுடன் அனு இம்மானுவேல் நடித்திருந்த அந்தப் படம் எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டாலும் வசூலில் ஹிட்டடித்துள்ளது. நாக சைதன்யா தனி ஹீரோவாக நடித்தப் படங்களில் இந்தப் படத்தின் வசூலே அதிகம் என்கிறார்கள்.

சமந்தா – நாக சைதன்யா தம்பதி ஒரே நாளில் பெற்ற நான்கு வெற்றிகளை ஒருசேர கொண்டாடி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here