தியாகராஜன் குமாரராஜாவின் ஆரண்யகாண்டம் வெளியாகி சரியாக 7 வருடங்களாகிறது. அடுத்தப் படம், சூப்பர் டீலக்ஸை இப்போதுதான் எடுத்துக் கொண்டிருக்கிறார். படம் குறித்த முக்கியமான அப்டேட்டை சமந்தா சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

சூப்பர் டீலக்சின் கதையை தியாகராஜன் குமாரராஜாவுடன் இணைந்து நலன் குமாரசாமி, மிஷ்கின், நீலன் ஆகியோர் எழுதியுள்ளனர். ஆளுக்கொரு எபிசோட் என கேள்வி. விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் என பலர் நடித்துள்ளனர். அதில் சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைவடைந்ததாக சமந்தா புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டுள்ளார்.

சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைவுபெற்றதை கேக் வெட்டி படக்குழு கொண்டாடியது.

இந்தப் படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராக நியமிக்கப்பட்டு, கருத்து வேறுபாடால் அவருக்குப் பதில் வினோத் உள்ளே வந்து, இந்தியில் அவர் படம் செய்யப் போக இறுதியில் நீரவ் ஷா உள்ளே வந்திருக்கிறார். இசை யுவன்.

இந்த வருடம் சூப்பர் டீலக்ஸ் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்