சமந்தாவுக்காக தடியடி வாங்கிய இளைஞர்கள்

0
237
Samantha

நடிகை சமந்தாவைப் பார்ப்பதற்காக போலீசாரிடம் தடியடி வாங்கியிருக்கிறார்கள் கிருஷ்ணகிரி இளைஞர்கள்.

நடிகைகள் கடை திறப்பு விழாவுக்கு வருகிறார்கள் என்றால் புற்றீசலாக இளைஞர்கள் குழுமிவிடுகிறார்கள். அது சன்னி லியோனாக இருந்தாலும் சமந்தாவாக இருந்தாலும். 70 எம்எம் திரையில் பார்க்கிறவர்களை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல்.

நகைக்கடை திறப்பு விழாவுக்காக கிருஷ்ணகிரி வந்தார் சமந்தா. அவர் வருவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே இளைஞர்கள் குவிந்துவிட்டனர். இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சமந்தா வந்தபோது அவரை இறங்கவிடாமல் காரைச்சுற்றி சூழ்ந்து கொள்ள, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

நடிகைகளைப் பார்க்க தடியடி வாங்க தயங்காத வீரத்தமிழர்கள் இருக்கும்வரை ரஜினி, கமல் தயங்காமல் அரசியலில் இறங்கலாம்.

இதையும் படியுங்கள் : #OvercomeOckhi: ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்

இதையும் படியுங்கள் : கிரிமினல் வழக்குகள்: டாப் 10 முதல்வர்கள் யார்?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்