சமத்துவமின்மை, வேலையின்மை, வறுமை, பண வீக்கம், வெறுப்பு பேச்சு … எதையும் விட்டுவைக்கல.. ஒரே பாட்டில் அசத்திய விஜய்

0
668

தன்னை சுற்றி நடக்கும் அத்தனை பிரச்சனைகளுககும் பதில் அளிக்கும் வகையில் மாஸ்டர் படத்தில் விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாட்டு அமைந்துள்ளது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்த படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காதலர் தினமான இன்று மாஸ்டர் படத்தில் இருந்து குட்டி ஸ்டோரி என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை விஜய்யே பாடி உள்ளார். அதில் நான் ஒரு குட்டி கதை சொல்லப்போகிறேன். என்னா சொல்ல வர்றேன்னு கவனமா கேளுங்க என்று ஆங்கிலத்தில் ஆரம்பிக்கிறார். என்னப்பாக ஆங்கிலம் என்கிறீர்களா.. கொஞ்சம் கேளுங்க ப்ரோ.. வாழ்க்கை ரொம்ப சின்னது. எப்பவும் சந்தோஷமாக இருக்க என்கிறார்.

வாழ்க்கை மிகச்சிறியது என்பதால் எப்பவும் சந்தோஷமாகவே இருக்க விரும்புகிறேன் என்ற ரீதியில் பாடல் தொடங்குகிறது.

EQv-FEvr-VUAE-mcj

இந்த பாடலின் ஒரு வரியில் “பல வித பிரச்சனைகள் வரும்.. போகும்.. கொஞ்சம் கூலாகவே இருங்க” என்று தங்லீசில் பதில் அளித்துள்ளார் விஜய். அத்துடன் டிசைன் டிசைனா பிரச்சனைகள் இனி வரும் என்றும் அவர் இளைஞர்களுக்கு வேலையின்மை, வறுமை,  பணவீக்கம், சமத்துவமின்மை, கொரோனா, ஊழல்  என பல பிரச்சனை  வரும் என கூறியுள்ளார்.

வெறுப்பை பரப்பாதே என்று பாடும் போது கார்ட்டூன் பொம்மைக்கு காவி கலர்… பின்னால் பேசாதே… பணிவாக இருங்கள் எது வந்தாலும் கூலாக இருங்கள் என்று கூறுகிறது பாடல் வரிகள் 

இப்படி பாடலில் உள்ள எல்லா வரிகளுக்கும் அர்த்தத்தை தமிழில் மொழி பெயர்த்தால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் அதனை சந்தோஷமாக கடக்க வேண்டும், எதிர்க்கொள்ள வேண்டும் என்றே அமைகிறது இப்பாடல். நெகட்டிவிட்டியை (எதிர்மறையான கருத்துகள்) தூர தள்ளுங்கள், பாஸிடிவிட்டியை (நேர்மறையான கருத்துகள்) கொண்டாடுங்கள், கோபம் கஷ்டத்தில் தள்ளும், இப்படி பல வரிகள் .  

வேகமாக போனா கவனமாக இருக்கனும், மெதுவாக போனால் நிதானம் அவசியம் என்கிறார் ஒரு வரியில். ஒரு பாடல் அதுவும் தன்னம்பிக்கை ரீதியான பாட்டு வைக்கிறார்கள் என்றால் அதில் உள்ள உள் அர்த்தத்தை விஜய் நிச்சயம் புரிந்தே பாடியிருப்பார். அத்துடன் நாமே ரசிகர்களுக்கு சொல்கிறோம் என்பதால் கூடுதல் கவனமாக இருப்பார் அந்த வகையில் இப்பாடல் முழுக்க முழுக்க எல்லாவற்றுக்குமான பதிலாக பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here