கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதிப்பது தொடர்பான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பத்து வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்களுக்கு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதனை எதிர்த்து, அனைத்து பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க உத்தரவிடக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், அனைத்து வயதிற்குட்பட்ட பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க தயார் என கேரள அரசு பதில் மனுதாக்கல் செய்தது. சபரிமலை கோவில் நிர்வாகம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பான தீர்ப்பை, கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

View of Supreme Court of India in Delhi on 26 February 2014.  Manit.DNA

இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.பானுமதி மற்றும் அஷோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து வெள்ளிக்கிழமை (இன்று) உத்தரவிட்டது.

இதையும் படியுங்கள்: அப்பா சம்பாதித்த பணத்தில் ஜாலியாக இருப்பவரா நீங்கள்? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்