கேரளாவில்உள்ள பிரசிதிப்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 33 நாட்களில் வருமானம் 128 கோடியை தாண்டியிருப்பதாக தகவகள் வெளியாகியுள்ளது.

மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த இந்த இரண்டு மாத கால யாத்திரையின் முதல் 33 நாட்களில் மட்டும் ரூ.128 கோடி வருமானம் ஈட்டியுள்ளது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சபரிமலை தேவஸம் போர்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், டிசம்பர் 6ஆம் தேதிக்குள், அதாவது முதல் 20 நாட்களில் கோவில் வருவாய் ரூ.69.39 கோடியை எட்டியது. இந்நிலையல் தற்போது 33 நாட்கள் கடந்த நிலையில் வருமானம் ரூ.129 கோடியை எட்டியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது 2018-19 காலகட்டத்தின் வருமானத்தை விட 30% அதிகம் எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி வரை கிடைத்த வருவாய் குறித்து தேவஸம் போர்டு வெளியிட்ட பட்டியலில்… ‘அர்வன் பிரசாத்’ விற்பனையிலிருந்து 28.26 கோடி ரூபாயும், ‘அப்பம் பிரசாத்’ விற்பனையில் இருந்து 4.2 கோடியும் வருவாய் ஈட்டியுள்ளது. ‘ஹுண்டி’ வசூலில் இருந்து 23.58 கோடி ரூபாய் ஈட்டப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here