சபரிமலையில் போராட்டக்காரர்களை ஒடுக்க, 144 தடை உத்தரவை அமல்படுத்த அறிவுறுத்தியதும், துணை ராணுவப் படையை அனுப்பி வைத்ததும் மத்திய அரசுதான்

0
192

சபரிமலை விவகாரத்தில் பிரதமர் மோடி அப்பட்டமான பொய்களை கூறுகிறார்’ என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் என்று கூறியுள்ளார் 


 கேரள மாநிலம் கொல்லத்தில்  தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:


 அண்மையில் தமிழகத்திலும், கர்நாடகத்திலும் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களை கேரள அரசு சிறையில் அடைப்பதாகக் கூறி, மக்களை திசை திருப்பும் வகையில் பேசியுள்ளார்.


 சபரிமலை விவகாரத்தை பொருத்தவரை சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற மாநிலங்களில், சங்க பரிவார அமைப்பைச் சேர்ந்தவர்கள் சட்டத்தை மீறும்போது கூட அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதில்லை. ஆனால், கேரளத்தை பொருத்தவரை அதுபோல என்றைக்கும் நடக்காது.


 சபரிமலை விவகாரத்தில் பிரதமர் மோடி “இரட்டை நிலைப்பாட்டை’ கடைப்பிடிக்கிறார். சபரிமலையில் போராட்டக்காரர்களை ஒடுக்க, 144 தடை உத்தரவை அமல்படுத்த அறிவுறுத்தியதும், துணை ராணுவப் படையை அனுப்பி வைத்ததும் மத்திய அரசுதான். ஆனால், இப்போது இந்த விவகாரத்தில் மாநில அரசை, பிரதமர் மோடி குற்றம்சாட்டுகிறார் என்றார் பினராயி விஜயன்.


 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here