ஏற்கனவே பல படங்கள் நடித்திருந்தாலும் காக்கா முட்டை படமே ஐஸ்வர்யா ராஜேஷை கவனப்படுத்தியது. திறமையான நடிகை என்ற பெயர் மணிரத்னம் படம்வரை அவரை கொண்டு சேர்த்தது. சிவகார்த்திகேயன் தயாரித்த நாயகி மையப்படமான கனாவில் மைய கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் விரைவில் வெளியாகிறது. தற்போது ரவிக்குமார் மற்றும் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் தலா ஒரு படம் நடிக்கிறார். இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்துக்கு சிவகார்த்திகேயன் கால்ஷீட் தந்துள்ளார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பார் என கூறப்படுகிறது.

இதுதவிர அரைடஜன் படங்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் கைவசம் உள்ளது.


[orc]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here