சிவகார்த்திகேயனின் வளர்ச்சி போல் சமீபத்தில் யாருக்கும் அமையவில்லை. அரை டஜன் படங்களில் தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம்பிடித்தவர் அதையும் தாண்டி போய்க் கொண்டிருக்கிறார். கடைசி இரண்டு படங்கள் வர்த்தகரீதியில் நஷ்டம் என்ற போதிலும் அவரது வளர்ச்சி தொடர்கிறது.

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் விரைவில் திரைக்கு வருகிறது. ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் படம் ஒன்றில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். மார்ச் 15 முதல் பி.எஸ்.மித்ரன் படம் தொடங்குகிறது. இதையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கிறார்.

அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படமும், கோலமாவு கோகிலா நெல்சன் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க உள்ளார். அஜித்தின் ஆஸ்தான இயக்குநர் சிவா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவும் பேச்சுவார்த்தை போகிறது.

சிவகார்த்திகேயனின் படங்களின் பட்டியலைப் பார்க்கையில் 2020 இல் மிகப்பெரிய ஸ்டாராக அவர் வளர்ந்து நிற்பார் என்பது தெரிகிறது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here