சன் தொலைக்காட்சி மீது கொலைவெறியில் இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். குற்றம் நடந்தது என்ன?

இயக்குநர் முருகதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு சன் டிவியில் அவர் குறித்த ஒரு வீடியோவை வெளியிட்டனர். அதில் முருகதாஸ் இயக்கிய படங்கள், அவர் இயக்கத்தில் நடித்த நடிகர்களின் விவரங்கள் என அனைத்தும் இடம்பெற்றன. முருகதாஸின் முதல் படம் தீனா. நாயகன் அஜித். தல என்ற பட்டம் இந்தப் படத்துக்குப் பிறகே அஜித்துக்கு கிடைத்தது.

சன் தொலைக்காட்சியின் வீடியோவில் முருகதாஸ் இயக்கிய தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் பெயரும் படமும்கூட இடம்பெற்றது. ஆனால் அஜித்தின் பெயரும், படமும் மட்டும் இல்லை. அவர் தவிர்த்து முருகதாஸ் இயக்கத்தில் நடித்த அனைத்து ஹீரோக்களின் படங்களையும் அந்த வீடியோவில் இணைத்திருந்தனர்.

இந்த சிறுபிள்ளைத்தனமான கசப்பை அஜித் ரசிகர்கள் இணையத்தில் கண்டித்துள்ளனர். சன் தொலைக்காட்சி ஏன் அஜித்தை இருட்டடிப்பு செய்தது. அவர்களுக்கு அஜித் மீது அப்படியென்ன கோபம்?

திடீரென்று என்றுமில்லாமல் ஏன் முருகதாஸை சன் தொலைக்காட்சி கௌரவப்படத்தியது என்ற சந்தேகம் பலருக்கு இருக்கலாம். சன் பிக்சர்ஸ் தயாரித்துவரும் விஜய்யின் சர்கார் படத்தை முருகதாஸ் இயக்கி வருவதால்தான் இந்த தடபுடல் பிறந்தநாள் வீடியோ.

சன் தொலைக்காட்சிக்கும், அஜித்துக்கும் என்ன பிரச்சனை? விவரம் அறிந்தவர்கள் பத்து வரிகளுக்கு மிகாமல் எழுதி அனுப்பவும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்