சன்னி லியோன் தமிழ்ப் படத்தில் நடிக்க அனுமதிக்கக் கூடாது

0
381
Sunny Leone

சன்னி லியோனை தமிழ்ப் படத்தில் நடிக்க அனுமதித்தால் அவரைப் பார்க்க கூட்டம் கூடும், ஆகவே அவரை நடிக்க அனுமதிக்கக்கூடாது என்று கமிஷனர் அலுவலகத்தில் ஒருவர் புகார் செய்துள்ளார்.

நம் மக்களின் சமூக அக்கறைக்கு ஒரு அளவேயில்லாமல் போய்விட்டது. வடிவுடையான் இயக்கும் வீரமாதேவி சரித்திரப் படத்தில் நாயகியாக நடிக்கிறார் சன்னி லியோன். இந்தப் படத்தில் நடிப்பதன் மூலம் சன்னி லியோன் மீதான பார்வை மாறும் என்று வடிவுடையான் கூறியிருந்தார். தனது இமேஜை வீரமாதேவி மாற்றும் என்று சன்னி லியோனும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வீரமாதேவி தயாராகிறது. வடிவுடையான் படத்தில் நடித்தவர்களின் இருக்கிற இமேஜும் தொலைந்த கதை சன்னி லியோனுக்கு தெரியாது. போகட்டும்.

சென்னை புறநகரில் வீரமாதேவி படப்பிடிப்பு நடக்க உள்ளது. சன்னி லியோன் முன்னாள் நீலப்பட நடிகை. இளைஞர்களையும், மாணவர்களையும் கெடுக்கும் அவரது ஆபாச படங்கள் இணையத்தில் உள்ளன. அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டால் அவரைக் காண கூட்டம்கூடும். ஆகவே சன்னி லியோனை தமிழ்ப் படத்தில் நடிக்க வைக்கக் கூடாது என்று இனோச் மோசஸ் என்ற சமூக ஆர்வலர்(?) புகார் செய்துள்ளார்.

இந்தப் புகாரைப் பார்த்தால் விளம்பரத்துக்கு செய்யப்பட்டதோ என்று சந்தேகம் வருகிறது. இனோச் மோசஸ் வடிவுடையானின் ஸ்லீப்பர் செல்லா இருப்பாரோ?

இதையும் படியுங்கள்: உங்கள் மீது ஒருவருக்கு காதல் வர வேண்டுமா? 5 விஷயங்களை செய்யுங்கள்

இதையும் படியுங்கள்: இதில் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 2வது இடம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்