சன்னி லியோனை பயமுறுத்திய மம்முட்டி

0
193

சன்னி லியோனுக்கு இந்தியில் கிடைத்துவந்த வரவேற்பு குறைந்து தற்போது தமிழ், மலையாளத்தில் டிமாண்ட் கூடியிருக்கிறது. தமிழில் வீரமாதேவி, டெல்லி என இரு படங்கள் சன்னி லியோன்வசம் உள்ளன. மலையாளத்திலும் இரு படங்களில் நடிக்கிறார்.

விரைவில் வெளியாகயிருக்கும் மம்முட்டியின் மதுரராஜா படத்தில் ஒரு பாடலுக்கு சன்னி லியோன் ஆடியுள்ளார். உடன் ஆடியவர் (நடப்பவர் என்பதே சரி. மம்முட்டி என்று நடனம் ஆடினார்) மம்முட்டி. மம்முட்டி சீரியஸான ஆள், அவ்வளவு எளிதில் ஒருவருடன் பழக மாட்டார் என்று அவரைப் பற்றி அறிந்து வைத்திருந்ததால், படப்பிடிப்புதளத்தில் மம்முட்டியை பயத்துடனே எதிர்கொண்டிருக்கிறார் சன்னி லியோன். கருந்தேள் மீசையுடன் (அதுதான் படத்தில் மம்முட்டியின் கெட்டப்) மம்முட்டியைப் பார்த்ததும் சன்னி லியோனின் படபடப்பு அதிகரித்ததாக படத்தின் இயக்குநர் வைசாக் கூறியுள்ளார். அப்புறமென்ன… சன்னியின் முன்னால் அனைவரும் பலவீனமானவர்களாக மாறியிருக்கிறார்கள்.

மதுரராஜா தவிர்த்து சந்தோஷ் நாயரின் ரங்கீலாவிலும் சன்னி லியோன் நடிக்கிறார். இதில் முக்கியமான வேடமாம் சன்னி லியோனுக்கு. ஏற்கனவே படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.

சன்னி லியோன் கேரளாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தபோது, திருச்சூர் பூரம் தோற்குமளவுக்கு ரசிகர்கள் கூடினர். போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தினர். சன்னி லியோனுக்கு இப்படியொரு ரசிகப்படையா என்று வியந்த மலையாள திரையுலகினர் அதனை காசாக்கும் முயற்சியாக சன்னியை படங்களில் இறக்கியிருக்கிசூர்கள். ஆனால், ரசிகர்கள் ரசித்த சன்னி லியோனின் படங்கள் வேறு என்பதை சன்னி லியோன் நடித்த படங்கள் வெளியான பிறகு தயாரிப்பாளர்கள் புரிந்து கொள்வார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here