உங்கள் சுவையை தூண்டும் ருசியான சன்னா மசாலா தோசை ரெசிபி. சமைத்து அசத்தலாம் வாங்க.

சமைக்க தேவையானவை:

  •  கொண்டைக் கடலை- 1 கப் (கறுப்பு அல்லது வெள்ளை)
  •  பூண்டு- 3 பற்கள்
  •  சின்ன வெங்காயம்-10
  •  மிளகாய் தூள்-2 ஸ்பூன்
  •  நன்கு பழுத்த தக்காளி-2
  •  பெருஞ்சீரகம்- 1/4 ஸ்பூன்
  •  இஞ்சி- சிறு துண்டு
  •  மஞ்சள் தூள்- 1/2 சிட்டிகை
  •  சீரகம்- 1/2 ஸ்பூன்
  •  கொத்துமல்லி தழை- 1 கொத்து
  •  எண்ணெய்- 3 ஸ்பூன்
  •  தாளிக்க
  •  பிரிஞ்சி இலை-1
  •  கிராம்பு- 1

சன்னா மசாலா தோசை 
செய்முறை :

1.

கொண்டைக் கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்து விட வேண்டும். மறுநாள் கழுவி நீரை வடித்துவிட்டு தேவையான அளவு நீர், உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு இவற்றை பொடியாக நறுக்கவும்.

2.

ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம், பெருஞ்சீரகம் தாளித்து முதலில் வெங்காயம், பிறகு இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும். அடுத்து தக்காளி சேர்த்து கிளறிவிட்டு அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு இறக்கி வைத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது நீர் சேர்த்து அரைக்கவும்.

3.

பிறகு ஒரு பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெய் விட்டு கிராம்பு, பிரிஞ்சி இலை தாளித்து அரைத்து வைத்துள்ள பொருள்களை ஊற்றி கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்ததும் வேகவைத்த கொண்டைக் கடலையை சேர்க்கவும். கடலை , மசாலாவுடன் நன்றாகக் கலந்து கொதித்ததும் கொத்துமல்லி தழை தூவி இறக்கவும். இதை சப்பாத்தி, நாண், பரோட்டாவுக்கு பக்க உண்வாகப்பயன்படுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here