அரையாண்டுத் தேர்வு விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தலாம் என பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

*தமிழக அரசின் கீழ் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகளுக்கும் டிசம்பர் 23-ம் தேதி அரையாண்டுத் தேர்வு முடிந்தது. ‘தேர்வுகள் முடிந்ததும், டிசம்பர் 24-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை விடுமுறை. ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்’ என்று பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்கிடையே உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடக்க உள்ளதால், தேர்வு விடுமுறை நீட்டிக்கப்பட்டு ஜன.3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

*எனினும் ஆசிரியர் சங்கங்கள், ”தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி 2-ம் தேதி எண்ணப்பட உள்ளன. இந்தத் தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மற்றும் அதுதொடர்பான பணிகள் நள்ளிரவு வரை நடைபெற வாய்ப்புள்ளது. இந்நிலையில் முந்தைய தினம் நள்ளிரவு வரை பணி செய்துவிட்டு மறுநாள் பள்ளிக்குச் செல்வது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். அதனால் பள்ளிகளைத் திறப்பதை ஒரு நாள் தள்ளிவைக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தன. ஆதலால், அரையாண்டுத் தேர்வு விடுமுறை மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு, ஜனவரி 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

*இதனிடையே இன்னும் சில தினங்களில் பொங்கல் பண்டிகைகளுக்கு விடுமுறை விடப்படும்(( 11, 12ம் தேதி சனி ஞாயிறு விடுமுறை வருகிறது.13ம் தேதி ஒரு நாள் பள்ளி,மீண்டும் 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை பொங்கல் விடுமுறை)). இப்படி தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை வருவதால்  பள்ளி வேலை நாட்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பொதுத்தேர்வுக்கான பாடங்களை நடத்தி முடிப்பதும், செய்முறை மற்றும் திருப்புதல் தேர்வுகளை நடத்தி முடிப்பதும் சிக்கலாகியுள்ளது.

*10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க இருப்பதால், அதற்குள் பாடங்களை நடத்தி முடிக்க முடியாது என்று ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு, முழு வேலை நாளாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here