சந்தோஷ் ராஜை மிரட்டிய ரஜினி மக்கள் மன்றம்

0
1496

நடிகர் ரஜினிகாந்தை யார் நீங்கள் என்று கேட்டதன் மூலம் பிரபலமான இளைஞர் சந்தோஷ் ராஜ் . தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிறகு பாதிக்கப்பட்ட மக்களை ரஜினிகாந்த் நேரில் சென்று சந்தித்தார். நடிகனாக என்னை பார்த்து மக்கள் மனமகிழ்வார்கள் என்று ரஜினி பேட்டி அளித்துவிட்டு தூத்துக்குடி சென்றார்.

மகிழ்ச்சியுடன் சென்ற ரஜினிக்கு சந்தோஷ் ராஜ் என்கிற கல்லூரி மாணவர் கேட்ட கேள்வி மொத்த நிகழ்ச்சியையும் திருப்பி போட்டது.

அவர் கேட்ட கேள்வி நீங்கள் யார்? நான் ரஜினிகாந்த். அது தெரியுது 100 நாட்களாக எங்கே சென்றீர்கள் என்று கேட்டார். ரஜினி சிரித்தபடி சென்றார். இந்த நிகழ்வு ஊடகங்களிலும், மீடியாக்களிலும் பெரிதானது. “#நான்தான்பாரஜினிகாந்த்” என்ற ஹேஷ்டேக் இந்தியா முழுவதும் டிரெண்ட் ஆனது. கேள்விகேட்ட இளைஞரை தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.

மறுநாள் ஏன் ரஜினியை யார் என கேட்டேன் என்பது குறித்து வீடியோ காட்சி மூலம் விளக்கம் அளித்தார் சந்தோஷ் ராஜ் .
அந்த வீடியோவையும் மக்கள் பார்த்தார்கள், மீடியாவும் ஒளிபரப்பியது .

இந்நிலையில் தி நியூஸ் மினிட் (The news minute ) சந்தோஷ் ராஜை பேட்டி கண்டது. அதில் சந்தோஷின் அம்மா ரஜினிகாந்த் (மே 30 ஆம் தேதி ) வந்து போன அன்று இரவு ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து சிலர் வந்து சந்தோஷ் ராஜை மிரட்டி அவரை பேச வைத்து ஃபோனில் பதிவு செய்திருக்கின்றனர் என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

பேட்டியின் முழு விவரம் : The news minute

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here