சந்தோஷ் நாராயணனுக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்

0
223

vijay-gifts-santhosh-narayanan-a-specially-made-bat-with-his-signature-photos-pictures-stills

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு அவரது பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கிப்ட் அளித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார் விஜய்.

சந்தோஷ் நாராயணன் சென்ற வருடம் வெளியான விஜய்யின் பைரவா படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த ஒரேயொரு படம்தான். மற்றவர்கள் என்றால் மறந்திருப்பார்கள். விஜய் சந்தோஷ் நாராயணனின் பிறந்தநாளை மனதில் வைத்து சனா என்று அவரை சுருக்கமாகக்குறிக்கும் பெயருடன், தனது கையெழுத்து இட்ட கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசளித்துள்ளார்.

https://twitter.com/Music_Santhosh/status/996391845969125376

இந்த ஸ்பெஷல் பரிசால் நெகிழ்ந்து போன சந்தோஷ் நாராயணன், அண்ணா இது என் வாழ்வின் சிறப்பு தருணம் என்று ட்விட்டரில் நெகிழ்ந்துள்ளார்.

இதையும் படியுங்கள்: சுரங்க முறைகேடு வழக்கில் ஜனார்த்தன ரெட்டிக்கு சாதகமாக தீர்ப்பு வர நீதிபதிக்கு 100 கோடி லஞ்சம் ; காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்