சந்தைக்கு வருகிறது ஆக்ஸ்ஃபோர்டு கொரோனா தடுப்பூசி: விலை விபரத்தை வெளியிட்ட சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா

0
460

உலகளவில் கொரோனாவை தடுக்க சுமார் 150 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பல்வேறு கட்ட சோதனை நிலைகளில் இருக்கின்றன. குறிப்பாக, அமெரிக்காவை சேர்ந்த ஃபைசர், மாடெர்னா ஆகிய நிறுவனங்கள் உருவாக்கியுள்ள தடுப்பூசிகள் இறுதிகட்ட சோதனையிலும் வெற்றிபெற்றுள்ளன.

இதுபோக, இங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசியும் கொரோனாவை தடுப்பதில் சக்திவாய்ந்ததாக இருப்பதாக சோதனை முடிவுகள் கூறுகின்றன. இந்நிலையில்

ஆக்ஸ்ஃபோர்ட் தடுப்பூசி வயதான முதியோரிடமும் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதாக சோதனை முடிவுகள் கூறுகின்றன.

இந்நிலையில், ஆக்ஸ்ஃபோர்ட் கோவிட்-19 தடுப்பூசியானது இந்தியாவில் வரும் பிப்ரவரி 2021-ல் சுகாதாரப் பணியாளர்களுக்கும் வயதானவர்களுக்கும் கிடைக்கும், அதன் தொடர்ச்சியாக ஏப்ரலில் பொதுமக்களின் தேவைக்காக சந்தையில் விற்பனைக்கு வரும் என்று சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் தலைவர் அதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று(வியாழக்கிழமை) மாலை நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,

ஆக்ஸ்ஃபோர்ட் கோவிட் 19 (Oxford-Astrazeneca) தடுப்பூசியானது வரும் பிப்ரவரி 2021-ல் சுகாதாரப் பணியாளர்களுக்கும் வயதானவர்களுக்கும் கிடைக்கும், அதன் தொடர்ச்சியாக ஏப்ரலில் சந்தைக்கு பொதுமக்களின் தேவைக்காக விற்பனைக்கு வரும்.

2024-க்குள் இந்தியாவில்அனைவரும் கோவிட் 19 தடுப்பூசியை எடுத்துக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. 4 வருடங்கள்ஆகும் எனச் சொல்வதற்கு தடுப்பூசியின் விலை, கொள்முதல் நேரம், மக்களின் விருப்பம் ஆகியவையே காரணம்.

இந்தத் தடுப்பூசியின்விலை 5 முதல் 6 அமெரிக்க டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்திய ரூபாய் மதிப்பில் 2 டோஸ்கள் விலை ரூ.1000-க்கு விற்கப்படலாம்.

ஆக்ஸ்ஃபோர்டு அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி, வயதானவர்கள் மத்தியில் நல்ல பலனளிக்கிறது. அவார்களுக்குச் செலுத்தப்பட்டபோது டி-செல்கள் சிறப்பான முறையில் செயல்படுவது பலகட்ட ஆய்வில் உறுதியாகியுள்ளது. பெரிய அளவில் பக்க விளைவுகளும் ஏற்படவில்லை.

இந்தியாவில் இந்ததடுப்பூசி தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. முழுமையான பலனும் திறனும் இன்னும் ஒரு மாதத்தில் தெரியவரும்.

இந்தத் தடுப்பூசியை மக்களிடம் அவசரத் தேவை அடிப்படையில் பயன்படுத்த ஐரோப்பிய மருந்துகள் மதிப்பீட்டு ஏஜென்சி அனுமதிக்கும்போது, சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா, மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறைக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கும். ஆனால், முதலில் சுகாதாரப் பணியாளர்களுக்கும், வயது முதிர்ந்தோரின் பயன்பாட்டுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

குழந்தைகளைப் பொறுத்தவரை கோவிட் 19, மற்ற வைரஸ் நோய்களுடன் ஒப்பிடுகையில் அவ்வளவு பாதிப்பு ஏற்படுத்துவதாக இல்லை. ஆகையால் குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசியை செலுத்துவதில் அவசரம் இல்லை. இன்னும் பலகட்ட ஆய்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கலாம்.

முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கும், முதியவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை வழங்குவதே சரியானதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here