சந்திரபாபு நாயுடுவின் செய்தித்தொடர்பு ஆலோசகர் பணியை ராஜினாமா செய்தார் நிர்மலா சீதராமனின் கணவர்

0
438

2014 ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் செய்தித்தொடர்பு ஆலோசகராக பணியாற்றி வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகாலா பிரபாகர் தனது பதவியை செவ்வாய்க்கிழமை (நேற்று) ராஜினாமா செய்தார்.

செவ்வாய்க்கிழமை சந்திரபாபு நாயுடுவுக்கு அனுப்பிய கடிதத்தில், மத்திய அரசுக்கு எதிரான முதல்வரின் போராட்டத்தில் தான் உடனிருப்பது அரசின் நேர்மையின்மையை பிரதிபலிப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டுவது தன் மனதை புண்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

”என் குடும்பத்தினர் (மனைவி நிர்மலா சீதாராமன்) வேறு கட்சியில் (பா.ஜ.க.) இருப்பதாலும் வேறு கொள்கைகளை கொண்டுள்ளதாலும் ஆந்திர மாநிலத்தின் நலனில் நான் சமரசம் செய்து கொள்வேன் என சிலர் (எதிர்க்கட்சியினர்) பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனால் என் மனம் புண்பட்டுள்ளது” என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பிரபாகர்,

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் குற்றச்சாட்டுகள் தம்மை அதிகம் காயப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் பா.ஜ.க. ஆந்திர மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக கூறி 2018 மார்ச் மாதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசிலிருந்து சந்திரபாபு நாயுடு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Courtesy : Economic Times

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here