சந்தானம் படத்துக்கு இரண்டாம் பாகமா?

0
75

நியாயமாக ஆச்சரியக்குறி போட வேண்டும். சந்தானம் நாயகனாக நடித்தப் படங்களில் தில்லுக்கு துட்டு தவிர மற்ற அனைத்தும் படுதோல்விகள். அப்படியிருக்க அவர் நடித்தப் படத்துக்கு இரண்டாம் பாகமா என்ற ஆச்சரியம் தோன்றுவது இயல்பு.

இனிமே இப்படித்தான் தொடங்கி சந்தானம் நாயகனாக நடித்த படங்களில் தில்லுக்கு துட்டு படம் மட்டுமே ஓரளவு லாபம் பார்த்தது. லொள்ளுசபா ராம்பாலா இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இப்போது கயல் சந்திரனை வைத்து டாவு என்ற படத்தை ராம்பாலா இயக்கி வருகிறார்.

தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவது என்று ராம்பாலா முடிவு செய்துள்ளார். சந்தானம் நாயகன். டாவு படம் வெளிவரும் முன்பே தில்லுக்கு துட்டு இரண்டாம் பாகம் தொடங்கப்படலாம் என்கிறார்கள்.

தில்லுக்கு துட்டு ஒரு பேய் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

இதையும் படியுங்கள்: உங்கள் பணத்தைத் திருடும் எஃப்.ஆர்.டி.ஐ சட்டம் ஏன் வேண்டாம்? நீங்கள் கேட்ட 5 கேள்விகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்