சத்யராஜ் கதை நாயகனாக நடித்த தீர்ப்புகள் விற்கப்படும்

The entire team of Sathyaraj-starrer Theerpugal Virkapadum is elated over the tremendous response to the new poster that was revealed for the festive occasion of Bakrid.

0
132

சத்யராஜ் கதை நாயகனாக நடித்த, தீர்ப்புகள் விற்கப்படும் படம், விரைவில், தணிக்கைக்கு செல்ல உள்ளது. தீரன் இயக்கி உள்ள இப்படத்தில், ஸ்மிருதி வெங்கட், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட, பலர் நடித்துள்ளனர்.

“சத்­ய­ராஜ் சார் ஏற்­கெ­னவே ‘தீர்ப்­பு­கள் திருத்­தப்­ப­ட­லாம்’ என்ற தலைப்­பில் நடித்­தி­ருக்­கி­றார். கடந்த 1980களில் ‘நீதிக்­குத் தண்­டனை’, ‘சட்­டம் ஒரு இருட்­டறை’ என்ற தலைப்­பு­களில் படங்­கள் வந்­துள்­ளன. அப்­போ­தெல்­லாம் படத்­தின் தலைப்பே அதில் பேசப்­பட்­டி­ருக்­கும் விஷ­யத்­தைச் சுட்­டிக்­காட்­டும். ஆனால், எனது படத்­தில் பேசப்­படும் விஷ­யம் இன்­னும் சற்று தீவி­ர­மா­னது,” என்­கி­றார் இயக்குனர் தீரன்.

இந்­தப்பட­மும் நீதி­யைப் பற்­றித்­தான் பேசு­கிறது என்­றா­லும் அதி­லும் ஒரு சின்ன மாற்­றம் இருப்­ப­தாக குறிப்­பி­டு­ப­வர், தனது படம் நீதி கேட்டு நீதி­மன்­றத்­துக்­குச் செல்­வ­தற்கு முன் உள்ள விஷ­யங்­க­ளைப் பேசும் என்­கி­றார்.

படம் குறித்து, தயாரிப்பாளர் சஜீவ் மீராசாஹிப் ராவுத்தர் கூறுகையில், ”ரசிகர்கள், நிச்சயமாக எங்கள் படத்தை, உச்சி முகர்ந்து பாராட்டுவர் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது. படத்தின் வெற்றி, பெருமை அனைத்தும், சத்யராஜையே சேரும்,” என்றார்.

சமீபத்தில் வெளியான, இப்படத்தின் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பைப் பெற்றுள்ளது.

Eek-H4-Kt-UEAEGP2n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here