சத்தீஸ்கர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் ஒன்பது பேர் உயிரிழந்தனர். மூன்று வீரர்கள் படுகாயமடைந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில், சி.ஆர்.பி.எப் 212வது பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள் ரோந்து பணிக்காக கிஸ்தாரமிலிருந்து பலோடி நோக்கி வாகனத்தில் சென்று கொண்டிருந்ததாகவும், அப்போது, மண்ணில் புதைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை மாவோயிஸ்டுகள் வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தியதாகவும் நக்சல் தடுப்பு சிறப்பு டிஜிபி அவஸ்தி தெரிவித்துள்ளார். இத்தாக்குதலில் ஒன்பது வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த மூன்று வீரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நத்சிங், உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். சிஆர்பிஎஃப் டிஜியை சத்தீஸ்கர் விரைந்து செல்லுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசின் தவறான கொள்கைகளால் உள்நாட்டு பாதுகாப்பில் இந்த மோசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர், உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 2ஆம் தேதியன்று, சத்தீஸ்கர் – தெலங்கானா மாநில போலீசார் இணைந்து, பிஜப்பூர் மாவட்டம் புஜாரி கன்கர் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது மாவோயிஸ்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்