சத்தான, சுவையான கறிவேப்பிலை – மிளகு – பூண்டு குழம்பு செய்வது எப்படி?

0
511

கறிவேப்பிலை – மிளகு – பூண்டு குழம்பு செய்வது எப்படி, வாங்க பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

 • கறிவேப்பிலை – அரை கப்
 • சின்ன வெங்காயம் – 20
 • மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
 • சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
 • உளுத்தம்பருப்பு – சிறிது
 • காய்ந்த மிளகாய் – 4
 • பூண்டு – 2 பல்
 • இஞ்சி – சிறுத்துண்டு
 • கட்டிப்பெருங்காயம் –சிறுத்துண்டு
 • கடுகு – தாளிக்க
 • நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
 • புளி – எலுமிச்சையளவு
 • உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்துவதக்கவும்.

வதக்கிய பொருட்களை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு ஊற வைத்தபுளியை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக விழுது போல் அரைக்கவும்.

அதேவானலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கட்டி பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.

தாளித்தவற்றுடன் பொடியாக நறுக்கின வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பின்னர் அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து வதக்கி விடவும்.

வதக்கிய பின்னர் ஊற வைத்தபுளி தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

குழம்பில் எண்ணெய் மேலே மிதக்கும் வரை சுண்டியதும் மல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

பயன்:

கறிவேப்பிலையில் விட்டமின் ஏ,பி,சி சத்துக்கள் நிறைய உண்டு. இது முடிவளரவும், நினைவாற்றலை அதிகரிக்கவும், பசியைதூண்டவும் உதவுகிறது. இது புற்றுநோய், இதய மற்றும் நுரையீரல், கண் சம்பந்தமான நோய்களுக்கு நல்ல மருந்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here