ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளது. அந்த நாட்டின் கச்சா எண்ணைய் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், பாரசீக வளைகுடா பகுதியில் தங்கள் நாட்டுப் போர்க் கப்பல்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. 

உலகின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு இடையே உள்ள நாடுகளுக்கு வான்வெளிப் பயணம் மேற்கொள்ள பாரசீக வளைகுடா முக்கிய வழித்தடமாக உள்ளது. எனவே அங்கு பயணம் செய்யும் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கு அணுசக்தி ஒப்பந்தத்தின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கப் போவதில்லை என ஈரானும் மிரட்டல் விடுத்து வருகிறது. 

இதனிடையே, ஐக்கிய அரபு அமீரகம் அருகே 4 எண்ணெய்க் கப்பல்களை தாக்கி, ஹூதி கிளர்ச்சியாளர்கள் நாசவேலையில் ஈடுபட்டனர். இத்தாக்குதல்கள் அனைத்துக்கும் ஈரானே முக்கியக் காரணம் என்று சவூதி அரேபியா குற்றம் சாட்டி வருகிறது. இதனால், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது.

இந்தச் சூழலில், ஈரானிடமிருந்து பெருமளவு எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளான இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர், கடந்த வாரம் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். வல்லரசு நாடுகளுடனான அணு சக்தி ஒப்பந்தத்தைப் பாதுகாக்கும்படி ரஷியா, சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளிடம் ஈரான் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்நிலையில், அமெரிக்காவை மிரட்ட வேண்டும் என்று எப்போதும் நினைக்க வேண்டாம். போருக்கு ஈரான் தயார் என்றால் அதுவே ஈரான் நாட்டின் அதிகாரப்பூர்வ முடிவாக அமையும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here