ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அண்மையில் வழக்கு விசாரணை தொடர்பாக, ஆந்திர மாநிலத்தில், மத்திய அரசு அலுவலகங்கள் தவிர, வேறு இடங்களில் சோதனை அல்லது விசாரணை நடத்த சி.பி.ஐ.அதிகாரிகள், மாநில அரசிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்து, அரசின் ஒப்புதல் பெற வேண்டும் எனவும் இதற்காக சிபிஐக்கு அளித்திருந்த ஒப்புதலை ரத்து செய்து தடை விதித்தார். இதைத்தொடர்ந்து, மேற்கு வங்கத்திலும் முதல்வர் மம்தா பானர்ஜி, சிபிஐ முன் அனுமதியின்றி சோதனை நடத்த தடை விதித்தார்.

இந்நிலையில், சட்டீஸ்கர் மாநில அரசும் இதே நடவடிக்கையை எடுத்துள்ளது. இது தொடர்பாக சத்தீஷ்கர் மாநில அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், புதிய விவகாரங்களில் சிபிஐ தனது அதிகார வரம்பை சட்டீஸ்கர் மாநிலத்தில் முன் அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது என மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும். இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு 2001 ஆம் ஆண்டு அளித்திருந்த ஒப்புதலை மாநில உள்துறை திரும்ப பெற்றுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அலோக் வர்மாவை சிபிஐ தலைவர் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கி, அவரை தீ அணைப்புத்துறை மற்றும் பொது பாதுகாப்பு, உள்துறை பாதுகாப்புத்துறை இயக்குநராக மத்திய அரசு நியமித்த அதேநாளில், சட்டீஸ்கர் ஆளும் காங்கிரஸ் கட்சி சிபிஐக்கு வழங்கியிருந்த ஒப்புதலை ரத்து செய்துள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்