சட்டப்பேரவையில் ஸ்டெர்லைட் ஆலை தொடங்க யார் காரணம் என்று விவாதிக்க நாங்கள் தயார் முதல்வர் தயாரா? ஸ்டாலின்

0
203

ஸ்டெர்லைட் ஆலை தொடங்க யார் காரணம் என்பது பற்றி சட்டசபையில் விவாதிக்க நானும் திமுக எம்.எல்.ஏ.க்களும் தயாராக உள்ளோம். முதல்வர் தயாரா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டதாக சட்டசபையில் இன்று (புதன்கிழமை) முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். இதற்கு பதிலடியாக மு.க.ஸ்டாலின், “ஸ்டெர்லைட் ஆலை தொடங்குவதற்கு யார் காரணம் என்பது பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்க நானும், திமுக எம்எல்ஏக்களும் தயாராக உள்ளோம். முதல்வர் தயாராக உள்ளாரா என்பதை தெரிவிக்கட்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும், “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவு எடுத்தால், சட்டமன்ற கூட்டத் தொடரில் திமுக பங்கேற்க தயார்” எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here