’சட்டப்பேரவையில் ஜெ.படம்’: வழக்குத் தொடர்ந்தது திமுக

0
233

தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மனுத் தாக்கல் செய்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில், திங்கட்கிழமை (இன்று), மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்த ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்தை தமிழக சட்டமன்றத்தில் திறப்பது சபையின் கண்ணியத்தையும், கவுரவத்தையும் குறைக்கும் வகையில் உள்ளது எனக் கூறி திமுக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியைப் புறக்கணித்தனர்.

இந்நிலையில், சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு செவ்வாய்க்கிழமை (நாளை) விசாரணைக்கு வரவுள்ளது.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்