தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைக் கவுரவிக்கும் விதமாக, அவரின் உருவப்படத்தை சட்டப்பேரவையில் திறக்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, தமிழக சட்டப்பேரவையில், திங்கட்கிழமை (இன்று), மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த உருவப்படம், ஐந்து அடி அகலமும், ஏழு அடி உயரமும் கொண்டது. ஜெயலலிதாவின் உருவப்படத்தின்கீழே அமைதி, வளம், வளர்ச்சி என்ற சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

திமுக, காங்கிரஸ் புறக்கணிப்பு

வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்த ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்ட மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்தை தமிழக சட்டமன்றத்தில் திறப்பது சபையின் கண்ணியத்தையும், கவுரவத்தையும் குறைக்கும் வகையில் உள்ளது எனக் கூறி திமுக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியைப் புறக்கணித்தனர். மேலும் ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன், திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவில்லை.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்