தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவினைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில், கடந்த பிப்.12ஆம் தேதி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என உச்சநீதிமன்றம் உறுதி செய்திருப்பதால் அவரது படத்தைத் திறக்க கூடாது என, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதனையடுத்து, சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் மீதான விசாரணையின்போது, முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை என தமிழக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (ஏப்.27) தீர்ப்பளித்தது. அதில், சபாநாயாகரின் நிர்வாக அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்தது.

இதையும் படியுங்கள்: உங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here