சட்டப்படியான குறைந்தபட்ச திருமண வயதை எட்டுவதற்கு முன்னரே 18 முதல் 29 வயதுவரையுடைய பெண்களில் 25 சதவீதம் பேருக்கு திருமணம் நடைபெற்றிருப்பது தேசிய குடும்ப சுகாதார கண்காணிப்பு (என்எஃப்ஹெச்எஸ்) அமைப்பு நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதுபோல, 21 முதல் 29 வயதுவரையுடைய 15 சதவீத ஆண்களுக்கு சட்டப்படியான குறைந்தபட்ச திருமண வயதை எட்டுவதற்கு முன்பே திருமணம் நடைபெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்தியாவில்‌ பெண்களுக்கான சட்டப்படியான குறைந்தபட்ச திருமண வயது 18 என நிர்ணயம்‌செய்யப்பட்டுள்ளது. ஆண்களுக்கு 21 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது, இரு தரப்பினருக்கும்‌குறைந்தபட்ச திருமண வயதை 21-ஆக மாற்றுவதற்கு அரசு திட்டமிட்டு வருகிறது.இந்தச்‌ சூழலில்‌, சட்டப்படியான வயதை அடைவதற்கு முன்னரே திருமணங்கள்‌ நடைபெறுவது தொடர்பாக2019 முதல்‌ 2021 வரை என்‌எஃப்ஹெச்‌எஸ்‌ ஆய்வு மேற்கொண்டு, அதன்‌ முடிவை அண்மையில்‌வெளியிட்டது.

அதில்‌ கூறியிருப்பதாவது:சட்டப்படியான குறைந்தபட்ச திருமண வயதை எட்டுவதற்கு முன்னரே பெண்களுக்கு திருமணம்‌செய்துவைக்கப்படும்‌ மாநிலங்களில்‌ 42 சவீதத்துடன்‌ மேற்கு வங்கம்‌ முதலிடத்தில்‌ உள்ளது.

பிகார்‌ (42%),திரிபுரா (39%), ஜார்க்கண்ட்‌ (35%), ஆந்திரம்‌ (33%), அஸ்ஸாம்‌ (32%), தாத்ரா நாகர்‌ ஹவேலி மற்றும்‌ டாமன்‌டையு (28%), தெலங்கானா (27%), மத்திய பிரதேசம்‌, ராஜஸ்தான்‌ மாநிலங்கள்‌ (25%) ஆகியவை இந்தவிவகாரத்தில்‌ அடுத்தடுத்த இடங்களில்‌ உள்ளன.அதுபோல, குறைந்தபட்ச திருமண வயதை எட்டுவதற்கு முன்னரே ஆண்களுக்கு திருமணம்‌ நடைபெறும்‌மாநிலங்களில்‌ 25 சதவீதத்துடன்‌ பிகார்‌ முதலிடத்தில்‌ உள்ளது. குஜராத்‌, ராஜஸ்தான்‌, மத்திய பிரதேசம்‌ 24சதவீதத்துடனும்‌, ஜார்கண்ட்‌ 22 சதவீதத்துடனும்‌, அருணாசல பிரதேசம்‌ 21 சதவீதத்துடனும்‌, மேற்கு வங்கம்‌20 சதவீதத்துடனும்‌ அடுத்தடுத்த இடங்களில்‌ உள்ளன.இதில்‌ குறைந்தபட்சமாக லட்சத்தீவு, சண்டீகரில்‌ 1 சதவீதத்துக்கும்‌ குறைவான ஆண்களுக்கு திருமணவயதை எட்டுவதற்கு முன்னரே திருமணம்‌ நடைபெறுகிறது.

கேரளத்தில்‌ 1 சதவீத ஆண்களுக்கும்‌,கர்நாடகம்‌, தமிழகம்‌, நாகாலந்து மாநிலங்களில்‌ 4 சதவீத ஆண்களுக்கும்‌ குறைந்தபட்ச திருமண வயதைஎட்டுவதற்கு முன்னரே திருமணம்‌ செய்து வைக்கப்படுகிறது. 11 சதவீத திருமணங்கள்‌ ரத்தசொந்தங்களில்‌ நடைபெறுவதும்‌, இது கேரளம்‌ தவிர்த்து பிற தென்‌ மாநிலங்களில்‌ பொதுவான நிகழ்வாககாணப்படுவதும்‌ ஆய்வில்‌ தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here