சட்டசபையில் ஆபாச படம் பார்ப்பது ஒன்றும் தேச விரோத செயல் இல்லை – பாஜக அமைச்சர்

0
258

சட்டசபையில் ஆபாசப் படம் பார்ப்பது தேச விரோதமல்ல என கர்நாடக சட்டத் துறை அமைச்சர் மதுசாமி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் எச் டி குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்த எடியூரப்பா முதல்வரானார். மேலும் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்ததற்கே அவரது கட்சியிலும் கூட்டணி கட்சியிலும் இருந்த அதிருப்தியாளர்கள்தான். எனவே ஆட்சியை தக்க வைக்க அதிருப்தியாளர்களை திருப்திப்படுத்துவது என்ற முடிவுக்கு வந்த எடியூரப்பா, அதிருப்தியாளர்களான கோவிந்த் கார்ஜோல், அஸ்வத் நாராயணன், லட்சுமண் சவடி ஆகியோருக்கு துணை முதல்வர் பதவி வழங்கியுள்ளார்.

இவர்களில் லட்சுமண் சவடி கூட்டுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்தவர். கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பானது. அப்போது லட்சுமண், தனது செல்போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிந்தது.

அதை அமர்ந்திருந்த அப்போதைய அமைச்சர் சி.சி. பாட்டீல் எட்டி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது சர்ச்சையை கிளப்பியதை அடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு இப்போது அமைச்சரவையில் இடம் அளித்திருப்பதை காங்கிரஸ் தலைவர் சித்தராமையா கடுமையாக விமர்சித்திருந்தார்.

மாநில சட்டத் துறை அமைச்சர் மதுசாமி, சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்ப்பது தேச விரோத செயல் அல்ல. ஆபாச படம் பார்ப்பது தார்மீக ரீதியில் தவறானதுதான்.

அவர் எதிர்பாராதவிதமாக செல்போனில் அதை பார்த்தார். அதனால் அவர் அமைச்சராக இருக்கவே கூடாது என கூறுவது தவறு. ஆபாச படம் பார்ப்பது சரியில்லைதான். ஆனால் அதன் மீதான விவாதம் தேவையற்றது என்றார்.