சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக புகார் கூறிய கர்நாடகா சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகா சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா, சசிகலாவுக்கு விதிமுறைகள் மீறி சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், டிஜிபி இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு, சசிகலாவுக்கு தனி சமையலறை வசதிகள் உள்ளிட்ட வசதிகளைச் செய்து கொடுத்துள்ளதாகவும் புகார் கடிதம் அனுப்பினார். இதனை சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணா மறுத்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து கர்நாடக மாநில உள்துறை மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருக்கு சசிகலாவைச் சந்திக்க வந்தவர்கள் குறித்து சிறையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகிருந்த காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், சிறை விதிமீறல் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் மீண்டும் இரண்டாவது முறையாக அவர் புகார் கடிதம் அனுப்பினார். இந்நிலையில், டி.ஐ.ஜி ரூபா, கர்நாடகா சிறைத்துறையிலிருந்து, பெங்களூரு நகர போக்குவரத்து ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று புகாருக்கு உள்ளான டிஜிபி சத்யநாராயணாவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் : டிக்கெட் கட்டணம் – மக்கள் பக்கம் நிற்பது அரசா, போராடும் திரைத்துறையா?

பணக் கஷ்டத்திலிருக்கும் இப்போதுவுக்கு கீழேயுள்ள GIVE 5 பொத்தானை அழுத்தி நன்கொடை வழங்குங்கள்:

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்