சசிகலாவுடன் பேசினால் கட்சியில் இருந்து நீக்கம் – அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம்

0
330

சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியவர்களை அதிமுகவில் இருந்து நீக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கட்சி வளர்ச்சி, புகழுக்கு இழுக்கும் அவப்பெயரும் ஏற்படும் படி நடந்து கொள்பவர்கள் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்கவும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், அதிமுக பேரியக்கமாக இருக்குமே தவிர ஒரு குடும்பத்திற்காக தன்னை ஒருபோதும் அழித்து கொள்ளாது என்றும் அதிமுக லட்சியங்களுக்கு விரோதமாக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் எனக்குப் பின்னாலும் அதிமுக 100 ஆண்டுகள் இருக்கும் என்ற ஜெயலலிதாவின் லட்சியத்தை நிறைவேற்றுவோம் என்றும் அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் சசிகலாவுடன் பேசிய முன்னாள் அமைச்சர் ஆனந்தன், சின்னசாமி உள்ளிட்ட 15 பேரை கட்சியில் இருந்து நீக்கி ஓபிஎஸ் – இபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர்

 சசிகலாவுடன் தொலைபேசிய காரணத்திற்காக இவர்களை அதிமுகவில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளனர் 

பாமக வால் அதிமுகவுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்று நேற்று கருத்து கருத்து தெரிவித்திருந்தார் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி. இதையடுத்து இன்று அவரும் அதிரடியாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்

இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருவோர் குறித்து எம்.எல்.ஏக்கள் கண்டனம் தெரிவித்தனர். அவர்களை உடனடியாக நீக்க கோரிக்கை இனி சசிகலாவுடன் பேசுவோர் அனைவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

தேர்தலுக்கு முன் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க போவதாக கூறிய சசிகலா இப்போது கட்சி வலுப்பெற்ற உடன் அபகரிக்க நினைக்கிறார். ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் ஒருவருடன் பேசுவதும் அதை ஊரறிய செய்வதுமாக வினோதமான நாடகத்தை அரங்கேற்றுகிறார் . உழைப்பை சுரண்டும் ஒட்டுண்ணிகள். அவருடன் தொடர்பு வைத்திருப்போரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய 15பேரையும் கட்சி கட்டுப்பாட்டினை மீறியதாக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் முக்கிய அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here