நியூசிலாந்து அணிக்காக கடந்த 12 ஆண்டுகளாக விளையாடி வருபவர் 32 வயதான அமெ சட்டர்த்வெய்ட்(#AmySatterthwaite). நியூசிலாந்து பெண்கள்கிரிக்கெட் அணியின்கேப்டனாக அமெ சட்டர்த்வெய்ட் செயல்பட்டு வருகிறார்.  இவர் 119 ஒருநாள் போட்டிகளில் விளையாடி6 சதம், 21 அரைசதங்கள் உள்பட3,821 ரன்களும், 20 ஓவர் கிரிக்கெட்டில் 99 ஆட்டங்களில் ஆடி 1,526 ரன்களும் சேர்த்துள்ளார்.பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 4 சதங்கள் எடுத்த ஒரே வீராங்கனை இவர் தான்.

தன்பாலின ஈர்ப்புகொண்ட சட்டர்த்வெய்ட், அணியின்சக வீராங்கனையும், வேகப்பந்துவீச்சாளருமான 28 வயதான லியா தாஹூஹூவின்(#LeaTahuhu) பால் ஈர்க்கப்பட்டு இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர்.பின்னர் இவர்கள் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், தனதுடிவிட்டர் பக்கத்தில் சட்டர்த்வெய்ட்,தான் கர்ப்பமாக இருப்பதாகவும், இந்த மகிழ்ச்சியான தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்வது திரிலிங்காக இருப்பதாகவும் நேற்று(செவ்வாய்க்கிழமை) ஒரு பதிவொன்றைபோட்டுள்ளார். ‘அடுத்த ஆண்டு ஜனவரியில் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எங்களது வாழ்வின் புதியஅத்தியாயத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்’ என்றும் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும்பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சட்டர்த்வெய்ட் விளையாட மாட்டார். ஆனால், 2021ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பைகிரிக்கெட் போட்டிக்கு முன்பாக களம் திரும்ப திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் மகப்பேறு விடுப்பு திட்டத்தை புதியதாக ஒப்பந்த பட்டியலில் சேர்த்துள்ளது.இதனால் சட்டர்த்வெய்ட் 2019-20ஆம் ஆண்டு ஒப்பந்த பட்டியலில் தொடர்ந்து நீடிப்பார். கிரிக்கெட் விளையாடாமல் ஓய்வில் இருந்தாலும் ஒப்பந்த தொகையை அவர் முழுமையாக பெறுவார்.

சக வீராங்கனையை கரம்பிடித்த சட்டர்த்வெய்ட், எந்த முறையில் கர்ப்பம் ஆனார் என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை.

நியூசிலாந்து நாட்டில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம் உண்டு.