தெலுங்கு நடிகர் அபிஷேக்கை ஆபாசமாக பேசி தாக்கியதாக நடிகர் விமல் மீது இரு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நடிகர் விமல் விருகம்பாக்கம் பாஸ்கர் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதேபகுதியில் நடிகர் அபிஷேக்கும் தங்கியிருக்கிறார். தெலுங்கு நடிகரான அவர் தற்போது அவன் அவள் அது என்ற படத்தில் நடித்து வருகிறார். அபிஷேக் விமலை கிண்டல் செய்தது தொடர்பாக இருவருக்கும் உரசல் இருந்து வந்திருக்கிறது.

சம்பவத்தன்று இரவு, விமல் குடிபோதையில் தனது நண்பர்களுடன் ஆபாசமாக பேசி, தன்னை தாக்கியதாக அபிஷேக் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளார். விமல் தாக்கியதில் முகத்தில் ஏற்பட்ட காயத்துக்கு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்தபின் இந்த புகாரை அளித்துள்ளார்.

புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் ஆபாசமாக பேசுதல் மற்றும் காயம் ஏற்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகளில் விமல் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here