சகல செளபாக்கியங்களையும் அளிக்கும் வரலட்சுமி விரதம்

0
115

ஆடி அமாவாசைக்கு பின்னரும் பெளர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையன்றும் வருவதுதான் வரலட்சுமி பூஜை. சில தருணங்களில், ஆடி மாதமே வரலட்சுமி பூஜை வந்துவிடும். தற்போது வரலட்சுமி விரதம் ஆடி மாதத்தில்தான் வருகிறது. இன்று(வெள்ளிக்கிழமை) வரலட்சுமி விரதம். இது ரொம்பவே விசேஷம்.

இன்று வரம் கொடுக்கும் லட்சுமியை வரலட்சுமி என்றழைத்து விரதம் இருந்து வழிபட ஏற்ற நாளாகும். 

இன்றைய தினம் அதிகாலையில் வீட்டைச் சுத்தம் செய்து மாவிலைத் தோரணம் கட்டி, கோலமிட்டு லட்சுமிக்கு வரவேற்புக் கொடுக்க வேண்டும். ‘திருமகளே வருக’ என்று கோல மாவினால் எழுதலாம். பூஜை அறையில் வரலட்சுமியின் படத்தை பலகை மேல் நடுவில் வைக்க வேண்டும். அதன் அருகில் ஐந்து முக விளக்கில் பஞ்ச எண்ணெய் ஊற்றி பஞ்ச முக தீபம் ஏற்ற வேண்டும். அருகில் நெல் பரப்பி அதன்மேல் ஒரு தட்டில் அரிசி பரப்பி வைக்க வேண்டும்.

குடத்திற்குசந்தனம், குங்குமம்பொட்டுவைத்து, தேங்காய், பழம், வெற்றிலைபாக்கு, இனிப்புப்பொருள்நைவேத்தியத்தோடுலட்சுமிகவசம்பாடிவழிபாடுசெய்தால்பணத்தேவைகள்பூர்த்தியாகும். அன்றாடவாழ்க்கையின்அனுபவிக்கும்துன்பமெல்லாம்உந்தனருள்பெற்றுவிட்டால்ஓடுவதும்உண்மையன்றோ? இன்றோடுதுயர்விலக, இனியதனலட்சுமியே! மன்றாடிக் கேட்கின்றேன் வருவாய் இதுசமயம்! என்றுபாடுங்கள். லட்சுமிஇல்லம்தேடிவருவாள்.

எனவே, வரலட்சுமி பூஜையானஇன்றைய தினம், விரதம் மேற்கொண்டு, அம்பாளை மனதார அழையுங்கள். உங்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமியரும் வந்து, உங்களுக்கு எல்லாவிதமான செளபாக்கியங்களையும் தந்தருள்வார்கள் என்பது உறுதி.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)