கௌரி லங்கேஷ் கொலை – மாலேகான்- பிரக்யா- சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் – குற்றவாளிகளுக்கும் தொடர்பு – SIT

0
237

ர்நாடகா சிறப்பு நீதிமன்றத்தில் கௌரி லங்கேஷ் கொலை வழக்கு விசாரணை தொடங்கியிருக்கிறது. 

சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வழக்கில்  தேடப்படும் குற்றவாளிகளான  4 பேரும் ஹிந்துத்துவா அமைப்பான அபினவ் பாரத் -தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மெக்கா மஸ்ஜித் , அஜ்மீர் தர்கா, மாலேகான் குண்டு வெடிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள். இவர்கள் சனாதன் சன்ஸ்தா அமைப்புடன் தொடர்புடையவர்கள். இந்த 4 பேர் 2011 முதல் 2016 வரையில் இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெடி குண்டுகளை தயாரிக்க நடந்த  ரகசிய பயிற்சி முகாம்களில் பயிற்சிக்கு சென்றவர்கள்  என்று  கர்நாடகா போலீஸ் கூறியுள்ளது. இது பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலையில் கிடைத்த துப்பு என்று பெங்களூரு நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணைக் குழு சமர்பித்த ஆவணத்தின் ஒரு பகுதி .   

2008 இல் நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஜாமீனில் வெளியே இருக்கும் குற்றவாளியும், போபால் பாஜக வேட்பாளருமான  பிரக்யா சிங் உட்பட 14  குற்றவாளிகள், அதில் தேடப்படும் இந்துத்துவ அமைப்பின் உறுப்பினர்களான ராம்ஜி கல்சங்ரா மற்றும் சந்தீப் தாங்கே ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள்.  

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலையில் , கர்நாடகா சிறப்பு விசாரணைக் குழு சமர்பித்த ஆவணங்களின்படி , சனாதன் சன்ஸ்தா அமைப்புடன் தொடர்பில் இருந்த 3 பேர் கௌரி லங்கேஷ் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். வெடி குண்டுகள் தயாரிப்பது பற்றிய ரகசிய பயிற்சி முகாம்களில் பாபாஜி , 4 குருஜிக்கள் பங்குக் கொண்டனர் என்று 4 சாட்சிகள் கூறியுள்ளனர். 

கௌரி லங்கேஷ் கொலையில் , நவம்பர் 2018 இல் நடந்த கைதுக்குபின் பாபாஜி யார் என்று அடையாளம் காணப்பட்டார். இவர் தேடப்படும் குற்றவாளியாய் இருந்து  11 வருடங்களுக்கு பிறகு குஜராத்தில்  கைதானவர் சுரேஷ் நாயர் , இவர் அபினவ் பாரத் அமைப்பின் உறுப்பினர், அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் குற்றவாளி.   

இந்த சுரேஷ் நாயரின் கைதின்போது தெரிய வந்தது –   சனாதன் சன்ஸ்தா ரகசிய பயிற்சி முகாமில் இருந்தவர்கள் 3 வெடிகுண்டு நிபுணர்கள்  – அவர்கள் தாங்கே, கல்சங்கரா, அஷ்வினி சௌகான் ஆகியோர் – இவர்கள் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு , மற்றும் 4 வழக்குகளிலும் தொடர்பு உடையவர்கள். 

ரகசிய முகாமில்  கலந்துக் கொண்ட 5 வது பயிற்சியாளர் , கௌரி லங்கேஷ் வழக்கில் கைதான பிரதாப் ஹஸ்ரா, இவர் மேற்கு வங்கத்தில் இருக்கும் இந்துத்துவா அமைப்பான பவானி சேனாவைச் சேர்ந்தவர்.    

117 பேரை கொன்ற , 2006 லிருந்து 2008 வரையில் நடந்த குண்டு வெடிப்பு வழக்குகளின் தேடப்படும்  குற்றவாளிகள் அபினவ் பாரத்  இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் , இவர்களுக்கும் கௌரி லங்கேஷ் கொலையை செய்த குழுவுக்கும் தொடர்பிருக்கிறது என்று  சிறப்பு விசாரணைக் குழு மேற்கொண்ட விசாரணை கூறுகிறது. 

 அமித் டெக்வேக்கர், கலஸ்கர், பன்கர்கர், சூர்யவன்ஸி, கணேஷ் மிஷ்கின், அமித் பாடி, பாரத் குர்னே ஆகியோரை கௌரி லங்கேஷ் மற்றும் வேறு  கொலைகளில்  சந்தேகிக்கப்படுபவர்கள்,  குண்டு தயாரிக்கும் ரகசிய முகாம்களில் கலந்து கொண்டவர்களும்  இவர்கள்தான் . இவர்கள் குழுவுடன் இருந்த 4 பேர் தற்போது கௌரி லங்கேஷ் வழக்கில் சாட்சிகளாக உள்ளனர். இவர்களும்  குண்டு தயாரிக்கும் ரகசிய முகாம்களில் கலந்துள்ளனர். 

2011 இல் ஜல்னாவில் 5 முறையும்,  மீண்டும் ஜல்னாவில் , ஜனவரி, 2015 ஆம் ஆண்டும் ,  2015, ஆகஸ்டில் மங்களூருவிலும், 2015 நவம்பரில் அகமதாபாத்திலும், 2016 , ஜனவரியில் நாசிக்கிலும் அபினவ் பாரத்தைச் சேர்ந்தவர்கள் கலந்துக் கொண்ட குண்டு தயாரிக்கும் ரகசிய முகாம்கள் நடந்துள்ளன சிறப்பு விசாரணைக் குழு நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது . 

சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அபினவ் பாரத் என்ற பயங்கரவாத அமைப்புக்கும் சனாதன் சன்ஸ்தாவுக்கும் ஆயுதப்பயிற்சி வெடிகுண்டு பயிற்சி அளித்தவர்கள் ஒரே குழுவினர்தான் என்பதும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நான்கு பேர் கௌரி லங்கேஷ்  கொலை வழக்கில் தொடர்புள்ளவர்கள் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

indianexpress

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here