தெரிந்தவர் படங்களில் சின்ன வேடத்தில் தலைகாட்டுவது, அறிந்தவர் படங்களுக்கு குரல் கொடுப்பது, தெரியாதவர்களாக இருந்தாலும் அவர்கள் படங்களின் டைட்டில், பர்ஸ்ட் லுக்கை வெளியிடுவது என்று திரையுலகினரின் செல்வனாக இருக்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

இந்த வருடம் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து ஒரு நல்லநாள் பார்த்து சொல்றேன் படத்தில் நடித்தவர், கௌதம் கார்த்திக்கின் புதிய படத்தின் டைட்டில் லோகோவை அறிமுகப்படுத்தியுள்ளார்.

தேவராட்டம் உள்பட சில படங்களில் நடித்துவரும் கௌதம் கார்த்திக், அருண் சந்திரன் என்ற அறிமுக இயக்குநர் இயக்கத்திலும் ஒரு படம் நடிக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் லோகோவை விஜய் சேதுபதி வெளியிட்டார். இந்தப் படத்துக்கு செல்லப்பிள்ளை என்று பெயர் வைத்துள்ளனர்.

செல்லப்பிள்ளையை இசக்கிதுரை, அன்பழக திம்மன் தயாரிக்க சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்