தமிழ், மலையாளப் படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் இந்திக்கும் செல்கிறார். இந்த வருடம் அவரது தெலுங்குப் படமும் வெளியாக உள்ளது. படத்தின் பெயர் கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் கனா படத்தில் நடித்தார் அல்லவா. அந்தப் படத்தை தெலுங்கில் கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். கிரியேடிவ் கமர்ஷியல்ஸ் சார்பில் வல்லபா இந்த ரீமேக்கை தயாரிக்க, பீமநேனி ஸ்ரீனிவாச ராவ் படத்தை இயக்குகிறார். கனாவில் நடித்த முதன்மை கதாபாத்திரத்தை ஐஸ்வர்யா ராஜேஷே தெலுங்கிலும் செய்கிறார்.

படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை நாளை வெளியிடுகின்றனர். இது ஐஸ்வர்யா ராஜேஷின் முதல் தெலுங்குப் படமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here