ஜம்மு காஷ்மீர் சிறுமி அசிஃபா குறித்து பேசியதற்காக கோவை சட்டக்கல்லூரி மாணவி பிரியா சஸ்பெண்ட் செய்யப்படவில்லை என கல்லூரி முதல்வர் விளக்கமளித்துள்ளார்.

கோவை அரசு சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவி பிரியா தனது வகுப்பறையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எட்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து பேசியுள்ளார். மாணவி பிரியாவின் பேச்சு குறித்து, முதல்வரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, கல்லூரி நிர்வாகம் மாணவி பிரியாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இது தொடர்பான உத்தரவில், மாணவர்களுக்கிடையே மத ரீதியாக மோதல் ஏற்படும் வகையில் பேசியதாகக் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ள கல்லூரி முதல்வர், ஆணாதிக்கம் என்ற தலைப்பில் அவர் பேசியதால் மோதல் ஏற்படும் சூழல் உருவானதாகவும், பேச்சைத் தடுக்க முயன்றபோது பேராசிரியரிடம் தவறாக அவர் பேசியதாகவும், அதற்காகவே சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவல் தவறு என்று மாணவி ஆர். ப்ரியா மறுத்துள்ளார். “ஆஷிஃபாவின் பாலியல் பலாத்காரம் மற்றும் படுகொலை பற்றி பேசினேன்” என்கிறார் ப்ரியா.

இதையும் படியுங்கள்: ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்