தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கோவையில் இரண்டாவது நாளாக ஆய்வு பணியில் ஈடுபட்டார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், செவ்வாய்க்கிழமை (நேற்று) பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். இதனையடுத்து அவர், கோவை சுற்றுலா மாளிகையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இதனால் இந்த விவகாரம் தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் இந்த ஆய்வுக் கூட்டம் குறித்து பேசிய தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அரசு அதிகாரிகளை ஆளுநர் சந்திக்கக் கூடாது என்று எதுவுமில்லை என்றும், மாநில அரசின் அனைத்து நிலைகளிலும் மத்திய அரசு தலையிடுவதாக நினைப்பது தவறு என்றும் கூறினார்.

2வது நாளாக ஆய்வு

banwarilala

இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால், கோவையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆய்வு நடத்தினார். கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின்கீழ் செயல்படும் பயோ டாய்லெட்டையும் ஆய்வு செய்தார். மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை குடிசைப் பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

ஆளுநரின் இந்த நடவடிக்கையை, டெல்லி, புதுச்சேரி போன்று தமிழகத்திலும் மத்திய பாஜக அரசு, ஆளுநர் மூலம் ஆதிக்கம் செலுத்துவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்