கோவைட்-19 : சென்னையில் 24 விமானங்களின் சேவை ரத்து

Chennai airport, which usually has about 33,000 passengers travelling per day, looks nearly empty now.

0
380

சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் 24 விமானங்களின் சேவை கோவைட்-19(கரோனா வைரஸ்) தொற்று அச்சுறுத்தலால்  ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவைட்-19 தொற்று அச்சுறுத்தலால்  உலகம் முழுவதும் பலர் உயிரிழந்து வருகின்றனர். பலர் கூடும்  நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே கோவைட்-19 தொற்று பாதிப்பு காரணமாக, வெளிநாட்டு விசாக்களை ஏப்ரல் 15 ஆம் தேதி வரை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

அதேநேரம், கோவைட்-19  பாதிப்பு காரணமாக விமானங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

இதற்கிடையே ஏர் இந்தியா 7 நாடுகளுக்கான தங்களின் விமான சேவையை ரத்து செய்தது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் 24 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. சென்னை விமான நிலையத்துக்கு நாளொன்றுக்கு 59 பன்னாட்டு விமானங்கள் வந்து செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத், துபாய், சிங்கப்பூர், கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்து செல்ல வேண்டிய 24 விமானங்கள் இன்று(சனிக்கிழமை) ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 11 நாட்களில் 90 விமானங்கள் ரத்து வரை செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

முன்னதாக, இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன் கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் கோயில்களுக்கு வர கட்டுப்பாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here