கோவைட்-19(கரோனா வைரஸ்) உயிரிழப்புகள் குறித்து பொய் கூறுகிறது ஈரான் : சாட்டிலைட் படங்களால் சர்ச்சை

New satellite images from Maxar show Iranian authorities digging large numbers of graves in the Qom area, which media reports say is due to the growing numbers of Corona-19(coronavirus) victims in the country.

0
285

உலகம் முழுவதும் கோவைட்-19(கரோனா வைரஸ்) தொற்று பல உயிர்களைப் பலி வாங்கி வரும் நிலையில்
சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகள் கோவைட்-19 தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. ஈரானில் 12,729 பாதிக்கப்பட்டு, 611 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. உயிரிழப்புகளை அதிகம் ஏற்பட்டுள்ள மூன்றாவது நாடாக ஈரான் உருவாகியுள்ளது.

ஈரானில் கோவைட்-19 தொற்றுக்கு உயிரிழந்தவர்களை மூட்டைகளாகக் கட்டி, ஒரு பிரம்மாண்டக் குழியில் புதைப்பது போன்ற படங்கள் வெளியாகின.

ஈரானின் கோம் நகரச் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கடந்தபிப்ரவரி 24 ஆம் தேதி, ‘ கோவைட்-19 தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஈரானின் சுகாதார அமைச்சகம் பொய் கூறுகிறது’ எனக் குற்றம் சாட்டியிருந்தார்.
அவரது குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில், ஈரானில் கோவைட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களைப் புதைக்க மிகப்பெரும் குழிகள் தோண்டப்பட்டுள்ளது, சாட்டிலைட் மூலம் தெரியவந்துள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து,120 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பெஹெஷ்ட் இ மசூமே கல்லறையின் சாட்டிலைட் படங்களில் இரண்டு புதிய பிரம்மாண்ட குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அதன் பிறகு குழிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மேக்சர் டெக்னாலஜிஸ் என்ற விண்வெளி ஆய்வு மையம், இந்த சாட்டிலைட் படங்களை வெளியிட்டுள்ளது.

IJR2-UTTDYEI6-VCUOLRJTNMZHMA

High resolution satellite imagery from March 1 and March 8 shows increased activity inside the cemetery, with the grave site extended during the interim and more than a dozen vehicles near the area of the trenches in the second image. (Maxar Technologies)

இதனால், ஈரானில் கோவைட்-19தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை, அந்நாடு மூடி மறைப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு உறுதிப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை ஈரான் சுகாதார துறை இதுகுறித்து எந்த விளக்கத்தையும் தெரிவிக்க மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

DD-COMPOSITE-IRAN-MASS-GRAVE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here