கோவேக்சின் தடுப்பூசியை 60 சதவீதம் வெற்றிகரமானதாக ஆக்க முயற்சி: பாரத் பயோடெக்

Bharat Biotech and ICMR are working on Covaxin, one of the indigenous coronavirus vaccine candidates being developed in India.

0
215

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தியாவில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின், இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் கோவிஷீல்டு ஆகிய தடுப்பு மருந்துகள் ஆராய்ச்சியில் உள்ளன.

இதன்படி, இந்தியாவில் தயாராகி வரும் கோவேக்சின் தடுப்பூசியை 60 சதவீதம் வெற்றிகரமானதாக ஆக்க முயற்சித்து வருவதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சுவாசம் தொடர்பான தடுப்பூசிகள் 50 சதவீதம் வெற்றி அடைந்தாலே அதற்கு உலக சுகாதார மையம், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளிட்டவை அனுமதி வழங்குவதாகவும், கொரோனா தடுப்பூசியை 60 சதவீதம் வெற்றி அடைய வைக்க முயற்சித்து வருவதாகவும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here