கோவா, டெல்லி மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் திங்கட்கிழமை (இன்று) எண்ணப்பட்டு வருகின்றன.

கோவா மாநிலத்தின் பானாஜி மற்றும் வால்போய், டெல்லி மாநிலத்தின் பவானா மற்றும் ஆந்திர மாநிலத்தின் நந்தியால் ஆகிய தொகுதிகளில் கடந்த 23ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில், பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இதில் கோவா மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் பானாஜி தொகுதியில் போட்டியிட்ட கோவா மாநில முதல்வர் மனோகர் பரிக்கர், 9,862 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கிரிஷ் சோதங்கர் 5,059 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

இதையும் படியுங்கள்: “திருநங்கைகள் பாலியல் தொழிலை விரும்பிச் செய்வதில்லை”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்