ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக எந்தவித விசாரணையை நடத்தப்படத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு சில நாட்கள் கடந்துவிட்டன.

முதல்வர் மனோகர் பாரிக்கர் அறையில் ரஃபேல் தொடர்பான ரகசிய ஆவணங்கள் இருக்கின்றன’ என்று கூறும் ஒரு தொலைபேசி உரையாடல் வெளியாகியிருக்கிறது .

36 ரஃபேல் ஜெட் விமானங்களை ஒப்பந்தம் போட்டபோது, பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவர் மனோகர் பாரிக்கர். ஆனால், கோவாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலை அடுத்து, 2017 மார்ச் மாதம் மாநில முதல்வராக பொறுப்பேற்றார் பாரிக்கர். ஆனால், கடந்த சில மாதங்களாக கணைய பாதிப்பால் அவதிப்பட்டு வரும் பாரிக்கர், வீட்டிலேயே தங்கி சிகிச்சைப் பெற்று வருகிறார்.

சமீபத்தில் கோவா அமைச்சரவைக் கூட்டத்தில் பேசியுள்ள பாரிக்கர், ‘யாரும் ரஃபேல் குறித்தான முழு ரகசியத்தைத் தெரிந்து கொள்ள முடியாது. என்னை யாரும் நீக்க முடியாது, ஏனென்றால் ரஃபேல் போர் விமானக் கொள்முதல் குறித்த அனைத்து ஆவணங்களும் என் வீட்டுப் படுக்கை அறையில் இருக்கிறது என்று பேசிய ஆடியோ ஒன்றை காங்கிரஸ் வெளியிட்டு உள்ளது .

ஆடியோவின் நம்பகத்தன்மை குறித்து இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.

முதல்வர் மனோகர் பாரிக்கர் மிகவும் சுவாரஸ்யமான தகவலைத் தெரிவித்துள்ளார். தன்னுடைய படுக்கையில் ரஃபேல் ஒப்பந்தம் குறித்த ஆவணங்கள் இருப்பதாகக் கூறியுள்ளார். ரஃபேல் விவகாரத்தில் பாஜக தொடர்ந்து பொய்களையே கூறி வருகிறது என்பது இப்போது உண்மையாகியுள்ளது. ‘காவலாளி திருடர்’ என்பது தெளிவாகிவிட்டது.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும். மனோகர் பாரிக்கர் படுக்கை அறையிலும், வீட்டிலும் ரஃபேல் போர் விமானக் கொள்முதல் குறித்த ரகசியங்கள் என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு இந்த தேசம் பதில் கேட்கிறது. ஏன் காவலாளி (பிரதமர் மோடி) பாரிக்கருக்குப் பயப்படுகிறார்?

இப்போது பிரதமர் மோடி கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அவரின் நேர்காணல்கள் ஊடகங்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கப் பயன்படாது. ரஃபேல் ஆவணங்களை வெளிப்படையாகக் காட்டுவதில் என்ன உறுத்தல் இருக்கிறது. ரஃபேல் ஒப்பந்தத்தின் அத்தனை விஷயங்களும் வெளிவரத் தொடங்கி இருக்கின்றன.

‘காவலாளி’ ரகசியங்களை மோசமாகப் பாதுகாக்கிறார் என்பதற்கு புதிய ஆதாரங்கள் வருகின்றன. மோடி அரசு எதை மறைக்க முயல்கிறது. நாடாளுமன்றக் கூட்டுக்குழுக்கூட்டத்துக்கு ஏன் உத்தரவிட மறுக்கிறது.

நான் பிரதமர் மோடியிடம் கேட்கிறேன். ரஃபேல் போர் விமானக் கொள்முதலில் தவறுகளும், ஊழலும் இருக்கின்றன என்பது ஆவணங்களில் இருக்கிறது. அந்த ஆவணங்கள் பாரிக்கரிடம் இருக்கின்றன.

ஏன் அவர்கள் அதை மறைக்கிறார்கள். மோடி எதையும் மறைக்கவில்லை என்றால், பாரிக்கர் ஏன் தனது படுக்கை அறையில் ரஃபேல் ஆவணங்களை மறைக்க வேண்டும். அனைவரையும் மிரட்ட வேண்டும், யாரும் எனக்கு எதிராகச் செயல்பட முடியாது என்று கூறுகிறார்.

ஏனென்றால், அனைத்து ரகசியங்களும் அந்த ஆவணங்களில் இருக்கிறது. அந்த ஆவணங்கள் வெளிப்படையாக மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்” என்று காங்கிரஸ் கேட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 14 அன்று, உச்ச நீதிமன்றம், ‘ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக எந்தவித விசாரணையும் நடத்த வேண்டிய அவசியமில்லை’ என்று தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக இன்று முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here